Vol. 2, Issue 9, Part H (2016)
ஐங்குறுறூறு மருதத்திணைப் பாடல்களில் உள்ளுறை உணர்த்தும் பொருண்மைகள்
ஐங்குறுறூறு மருதத்திணைப் பாடல்களில் உள்ளுறை உணர்த்தும் பொருண்மைகள்
Author(s)
முனைவர் சு.சரஸ்வதி. முனைவர் தா.ஜெயந்தி
Abstract
இலக்கியம் வாழ்க்கைக்கு வழிகாட்டி.அது பழைய வாழ்வு முறையைச் சித்தரித்துக்காட்டி அதன் வழிப் புதிய வாழ்வு முறைக்கு வழிகாட்டும் துணையாகத் திகழ்கிறது.ஒரு நாட்டின் பண்பாட்டை விளக்கிக்காட்டுவது இலக்கியமே ஆகும். இலக்கியச் சொல்லோவியத்தில் அறநெறிகளை அமைத்துக்காட்டுவது, அவைகளின் மூலம் மக்களுக்கு அறிவுறுத்துவது, மக்களை நல்வழியிலே நடக்கும்படித் தூண்டுவது இதுவே இலக்கியமாகுமென்பார் சாமி சிதம்பரனார். சங்க இலக்கியங்கள் வாழ்விற்கான நெறிமுறைகளை எடுத்துக்கூறும் கருத்துக் கருவூலங்களாகத் திகழ்கின்றன.மேலும் நெறியற்ற முறையில் வாழ்பவர்களை மென்மையான முறையில் இடித்துக்கூறி வழிநடத்தும் நீதி இலக்கியமாகவும் திகழ்கின்றன. ஐங்குறுநூறு என்னும் நூல் பாட்டும் தொகையுமாகிய சங்கப் பாடல்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று.மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசையில் ஐந்திணைப் பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு திணையிலும் 100 பாடல்கள் உள்ளன.அவை சிறுசிறு ஆசிரியப் பாக்களின் அடுக்குகளாக உள்ளன.ஒவ்வொரு திணையிலும் 10 பாக்களைக் கொண்ட 10 அடுக்குகள் உள்ளன.ஒவ்வொரு திணையிலுமுள்ள 100 பாடல்களையும் ஒரே புலவர் பாடியுள்ளார்.இந்த நூலின் மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் ஓரம்போகியார்.
How to cite this article:
முனைவர் சு.சரஸ்வதி. முனைவர் தா.ஜெயந்தி. ஐங்குறுறூறு மருதத்திணைப் பாடல்களில் உள்ளுறை உணர்த்தும் பொருண்மைகள். Int J Appl Res 2016;2(9):561-565.